பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் - 77

அமைத்தவர்கள் இத்தனை பொருள் இந்தப் பண்பு என்ற சொல்லுக்கு உண்டு என்பது அறிந்து அமைத் திருக் கிறார்கள் என்று நான் எண்ணவில்லை. கம்பன் காவியத் தில் காணும் தன்மைகள்(Aspects) என்ற பொருளிலேதான் இந்தப் பண்பு என்பதை அமைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன் நான்.

இனி விவாதத்திற்குள் நுழைந்து பார்க்கலாம். வழக்கம் போல் கட்சிக்கு மூன்று பேராக மொத்தம் ஒன்பது பேர்விவாதத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தி இருக்கிறார்கள். கம்பனும் அவரவர் கட்சிக்கு வேண்டிய ஆதாரங்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து அவர்கள் ஒவ்வொருவரையுமே ஊக்கி இருககிறான். ஆதலால், நாம், அவன் ஒவ்வொரு தன்மையைப் பற்றியும் என்ன என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.

கம்பன் காவியமாகிய இராமாவதாரத்தில் புத்திர வாஞ்சை என்ற தன்மை சிறப்பாகவே பேசப்படுகிறது. காவிய நாயகனாகிய ராமனின் தந்தை தசரதனும், தாய் கோசலையும் புத்திர வாஞ்சை மிக மிக உடைய தாய் தந்தைய்ராகவே வாழ்கின்றனர். அதேபோல் இராவண னும் அவன் மனைவி மண்டோதரியும் மிகுந்த புத்திர வாஞ்சை உடையவர்கள்ாகத்தான் இருந்திருக்கின்றனர். ஏன் உலகில் எந்தத் தந்தைதான், தாய்தான்புத்திரவாஞ்சை இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார்கள்? காவியத்தின் ஆரம்பத்திலேயே, ராமனைத் தன்னுடன் அனுப்ப வேண்டிய விசுவாமித்திரன் வந்து கேட்டபோது புத்திர வாஞ்சை மிகுந்த தசரதன் துடித்துப் போய் விடுகிறான். தான் செய்கின்ற தவ வேள்விக்கு அரக்கர் இடையூறு செய்யாவண்ணம் 'வேள்வி காக்க கரிய செம்மலாகிய ராமனைத் தந்தருளுதி' என்று விசுவாமித்திரன் கேட்டது