பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பட்டிமண்டபம்

வர்களும் தங்கள் கட்சியை ஒட்டியும் எதிர்க் கட்சிகளை வெட்டியும் வாதிடுவார்கள். எல்லாம் பேசி முடிந்ததும் முதற் சுற்று முடியும். . ν

அடுத்து மறு சுற்றுத் தொடங்கும். ஒவ்வொரு கட்சி முதல்வரும் வரிசைப்படி வந்து தொகுப்புரை நிகழ்த்துவர்.அதில் தாங்கள் இதுவரைக் கூறிய வாதக் குறிப்புகளைத் திரட்டிக்காட்டித் தங்கள் தங்கள் கட்சியின் வன்மையையும், அவற்றில் எவற்றை எல்லாம் எதிர்கட்சி கள் மறுத்தடிக்க முடியவில்ல்ை என்பதையும் தலை வருக்கு எடுத்துக் கூற வேண்டும்.

பின்னர் மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருப்பின் ஒன்றை அல்லது இரண்டை தலைவர் முதலில் நீக்க வேண்டும். பின்னர் எஞ்சிய இரு கட்சியினரையும் கட்சிக்கு ஒருவராக வாதிடச் செய்ய வேண்டும். இரண்டு கட்சியாக உள்ளவர்களில், ஏற்கெனவே அமைந்த வரிசைப்படியே நேரடி வாதம் தொடங்க வேண்டும். இருவரும் வாதிட்டு முடிந்ததும் இருவரில் முன்னதாக வாதிட்டவர் பின்னவர் கூற்றுக்கு அல்லது குற்றச் சாட்டிற்கு விடையறுக்கும் முறையில் இறுதி உரை நிகழ்த்துவார். ஆனால் இறுதி உரையில் புதுக் கருத்துக்களோ, புதுக்குற்றச்சாட்டுக்களோ கூறக் கூடாது. சட்டப்படி, கூறினால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படலாகாது. அன்றி அதை மறுக்கவும் சம்பந்தப்பட்ட கட்சிக்குத் தலைவர் இடந்தருவார். -

இறுதியில் தீர்ப்பு வழங்கப்பெறும். தீர்ப்பு வழங்கு வதில் இருமுறை இன்று வழக்கில் இருந்து வருகின்றன. ஒன்று தலைவரே தீர்ப்பு வழங்குவது. சுமார் முப்பது முதல் ஐம்பது வரை நோக்கர்கள் நியமிக்கப்பட்டு