பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பட்டிமண்டபம்

தசரதனுக்குத் தன் உயிரையே கேட்டது போல் இருந்தது என்கிறான் கம்பன். மேலும் அம்பு துளைத்ததினால் மார்பில் ஏற்பட்ட புண்ணில் மீண்டும் தீக்கொழுந்து ஒன்று நுழைந்தது போல இருந்தது என்று தசரதன் அடைந்த துயரை வர்ணிக்கிறான் கம்பன். இன்னும் கைகேயி கேட்கும் இரண்டு வரங்களில் ஒன்று ராமனைக்காட்டிற்கு அனுப்புவதற்குரிய வரம் என்று அறிந்தபோது தசரதன்,

"பெண்ணே வண்மைக் -

கேகயன் மானே பெறுவாயேல் மண்ணே கொள் நீ

மற்றையது ஒன்றும் மற!" என்றும், . - "என் கண் என் உயிர்

என் மகன் எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடிறவாமை நிய' - என்றும் தானே ஏங்கித் துடிக்கிறான். ராமன் காடு சென்று விட்டான் என்பதை சுமத்திரன் மூலம் அறிந்ததும் உயிரையே விட்டு விடுகிறானே, அதைத்தான் கம்பன் எவ்வளவு அழகாக,

நாயகன் பின்னும் தன் தேர்ப்

பாகனை நோக்கி, நம்பி சேயனோ, அணியனோ என்றான்

- செய்ய . .

வேய் உயர் கானம், தானும் தம்பியும்

மிதிலைப் பொன்னும் - போயினன் என்றான்; என்ற

போழ்த்தத்தே ஆவிபோனான்