பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 79

என்று கூறுகிறான். இதைவிடத் தசரதனது புத்திர வாஞ்சையை விவரிக்க வேறு என்ன சான்று வேண்டும்?

தசரதனைப் போலவே, கோசலையும் ராமனிடம் மிகுந்த புத்திரவாஞ்சை உடையவளாகத்தான் இருந்திருக் கிறாள். மகுடம் சூடியவனாக ராமன் வருவான் என்று எதிர்நோக்கியிருக்கும் தாய்முன்குழைக்கின்ற கவரியின்றி கொற்றவெண்குடையும் இன்றி வந்து சேருகிறான்ராமன். 'நேர்ந்தது என்? இடையூறு உண்டோ நீள்முடி புனை தற்கு?’ என்று கேட்ட தாயிடம், 'அம்மா நின் காதல் திருமகன் எம்பி பரதனே, துங்க மாமுடி சூடுகின்றான்' என்று சொல்கிறான் ராமன். இதைக் கேட்ட கோசலை கொஞ்சமும் பதற்றம் அடையாமல்

முறைமை யன்று - என்பது

ஒன்று உண்டு, மும்மையின் நிறை குணத்தவன்

நின்னிலும் நல்லன் என்றே பரதனைப் பாராட்டுகிறாள். ஆனால் இதே தாய் பின்னர் தன் மகன் ராமன் பதினான்கு வருஷம் காடு செல்லப்போகிறான் என்று அறிகிறபோது துடிதுடித்துப் போய் விடுகிறாள். -

'வஞ்சமோ மகனே! இம்மாநிலம்,

தஞ்சமாக நீதாங்கென்ற வாசகம் அஞ்சும் அஞ்சும் - என் ஆருயிர் அஞ்சுமால்' என்றே புலம்ப ஆரம்பித்து விடுகிறாள். இப்படி நைந்து உருகும் தாயின் உள்ளம்தான் எத்தனை புததிரவாஞ்சை உடையதாக இருக்க வேண்டும்?

இத்தகைய சந்தர்ப்பங்கள் இராவணனுக்கும், மண் டோதரிக்கும் கிடைக்கவில்லைதான் என்றாலும், அவர்