பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பட்டிமண்டபம்

தம் அருமை மகன் இந்திரசித்தன் இலக்குவனது கணை யால் மாண்டு மடிந்து மண்மேல் கிடக்கின்றபோது, வந்து கண்டு, பிரலாபிக்கின்றார்களே, அந்தப் பிரலாபம் எல்லாம் அவர்களது புத்திர வாஞ்சையை எடுத்துக் காட்டுவதாக அமையாதோ? போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் அருமை மகனைக் கண்ட இராவணன் ஆம் இரக்கமே இல்லாத அரக்க நெஞ்சம் படைத்தவனா யிருந்தும்கூட, - -

“மைந்தவோ எனும், மாமகனே' எனும் 'எந்தையோ!' எனும், என் உயிரே! எனும் என்றுதானே புலம்புகிறான். இராவணனைப் போலவே மண்டோதரியும் தன் மகனது இளமை நினைவுகளை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து குமுறி அழுகிறாள்.

கலையினால் திங்கள் அன்ன வளர்கின்ற காலத்தே உன் சிலையினால் அரியைக் கொல்லக்

காண்பதோர் தவம்முன் செய்தேன் தலையிலாயாக்கை காண

எத்தவம் செய்தேன், அந்தோ! நிலை இலா வாழ்வை இன்னும்

நினைவெனொநினைவிலாதேன் -

என்று மருகும்போது, அவளது பாசத்தின் அளவை நம்மால் ஊகிக்க முடிகிறதல்லவா? இதுபோலவே வாலி தன் மகன் அங்கதனிடம் புத்திரபாசம் உடையவனாக வாழ்கிறான். காப்பியத்தில் வருகின்ற தாய் தந்தையர் அனைவருமே புத்திரவாஞ்சை உடையவர்களாகத்தான் வாழ்கிறார்கள். அத்தனையையும் அழகுபடச் சொல் கிறான் கம்பன்' - என்று புத்திரவாஞ்சைக் கட்சியிலே நின்று வாதாடியவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.