பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 84

இனி, சகோதர பாசத்தைக் கம்பன் எப்படிக் கூறு கிறான், என்பது பற்றி அந்தக் கட்சியினர் கூறுவதையும் பார்க்கலாம். ராமனுக்குத் தம்பியர் மூவர், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் என்று அறிவோம். இலக்குவனோ ராமனைப் பிரியாது எப்போதும் அவன் நிழல் போலவே தொடர்ந்து, தொண்டு புரிந்து வாழ்ந்தவன். ராமனது இன்பதுன்பங்களில் எல்லாம் பங்குகொண்டவன். இராம சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இந்திரசித்தனை வதைத்துவிட்டு ராமனிடத்தில் வந்த போது ராமனே சொல்கிறான்.

வம்பு செறி மலர்க்கோயில்

மலரோன் படைத்த மாநிலத்தில் தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனை

என்று இலக்குவனது பாசத்தை உணர்ந்து பேசுகிறான். பரதனைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். 'தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீந்து- காட்டிற்கே சென்று ராமனை நகர் திரும்பி மகுடத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறான். அதனை ராமன் மறுத்தபோதும் விடாது, அவனது பாதுகைகளை இரந்து பெற்று, அப்பாதுகைகளுக்கே மகுடம் சூட்டி அதன்பிரதிநிதியாகவே இருந்துதவக்கோலம் தாங்கி அரசு புரிகின்றான். இவனது சகோதர பாசமும் அளவிட முடியாத ஒன்றுதான். கடைசித் தம் பியான சத்ருக் கனனைப் பற்றி அதிகம் பேச்சில்லை. காவியத்தில். இந்தப் பேசாத் தம்பியும் ஒரே ஒரு தடவை வாய் திறந்து பேசி தன் சகோதர பாசத்தை மாத்திரம் அல்ல, இலக்கு வன், பரதன் இவர்கள் பாசத்தையுமே அளவிட்டு உரைக்கும் ஆற்றல் பெற்று விடுகிறான். காடு சென்ற ராமன் குறித்த தவணையில் நாடு திரும்பவில்லை