பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . பட்டிமண்டபம்

என்றதும் ராஜ்யபாரத்தை தம்பி சத்ருக்கனிடம் கொடுத்து விட்டு தான் தீப்பாய விரைகிறான். அப்போது பேசாத தம்பி பேசுகிறான். அதைக் கம்பன் சொல்லுகிறான்.

கானாளநிலமகளைக் கைவிட்டுப்

போனவனைக் காத்துப் பின்பு போனாலும் ஒரு தம்பி, போனவர்கள் வரும் அவதி போயிற்றென்னா ஆனாத உயிர்விடஎன்று அமைவானும்

ஒரு தம்பி, அயலே நானது யானம் இவ்வரசாள்வன், என்னே

இவ்வரசு, மற்று இனிதே அம்மா

என்பதாக இந்தப் பாடல்தான் ராமனிடத்துத் தம்பியர் மூவரும் கொண்டிருந்த பாசத்தை முறைப்படுத்திச் சொல்லி விடுகிறதே. உடன்பிறந்த தம்பியர் கதை இது என்றால் உடன் பிறவாத்தம்பியர்களான குகன், சுக்ரீவன், விபீஷணன் இவர்களிடம் ராமன் காட்டும் பரிவும் அவர்கள் மூவரும் ராமனிடம் வைத்திருக்கும் பாசமும் கம்பன் கவிதையிலே சிறப்பாக இருப்பதையும் பார்க் கிறோம். . குகனோடும் ஐவரானோம், வனத்திடை

குன்று சூழ்வான் - மகனோடும் அறுவர் ஆனோம்

எம் முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய! நின்னொடும்

எழுவரானோம் புகலரும் கானம் தந்து

புதல்வரால் பொலிந்தாள் உந்தை... என்ற கம்பன் பாடலை அறியாதார் யார்? - சக்கர வர்த்தித் திருமகனான ராமன், வேட்டுவனாகிய குகனை