பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 83

யும், குரங்கினத்தைச் சேர்ந்த சுக்ரீவனையும், அரக்கனா கிய விபீஷணனையும் தம்பியராக ஏற்று அவர்களிடம் காட்டும் பாசமும் அன்பும் அளவிட முடியாத ஒன்றாக அல்லவா இருக்கிறது. இப்படியெல்லாம் எடுத்துக் கூறினார்கள் சகோதர் பாசம் கட்சியில் நின்று வாதாடிய அனபாகள. -

இனி பதிபக்திக் கட்சியார் கூறுவதைக் கேட்கலாம். அந்தக் கட்சிக்காக வாதாடிய அன்பர்கள் பதிபக்திக்கு அடிப்படை மனைவியரது கற்பொழுக்கமே என்றும், அக்கற்பொழுக்கத்தில் தலை நிற்பவள் சீதை என்றும் கூறினர். இராவணன் மனைவியான மண்டோதரி தன் கணவனான இராவணன் போர்க்களத்தில் ராமனது அம்பால் வீழ்த்தப்பட்டு விழுந்து மடிந்தபோது மேலே விழுந்து புரண்டு அழுது அரற்றி, அவனது உடலைத் தழுவியபடியே உயிர் நீத்துவிடுகிறாள். வான்மீகரது கதையில் கற்பொழுக்கம் அற்றவளாக சித்தரிக்கப்பட்ட வாலியின் மனைவி தாரையைக் கூட சிறந்த கற் பொழுக்கம் உடைய மங்கையாகக் காட்டுகின்றானே கம்பன் இப்படி இராமகதை நெடுகிலும் மனைவியரது பதிபக்தியை எல்லாம் சிறப்பாகக் கூறுவதில் கம்பன் இணையற்று நிற்கிறான் என்பது இக்கட்சியினரின் வாதம். இத்தனை வாசாலகத்தையும் கேட்டபின், இதில் எந்த உணர்வு, எந்தப் பண்பு கம்பன் காவியத்தில் மேலோங்கி நிற்கிறது என்று கூறுவது எளிதான காரியம் அல்லதான். என்றாலும் கம்பன் என்ன கருதுகின்றான் என்பதை அவன் பாடிய கவிதைகளைக் கொண்டே கொஞ்சம் ஆராய்ந்து தெளியலாம் அல்லவா? முதலில் கம்பனில் புத்திர வாஞ்சை என்ற பண்பு மேலோங்கியிருக்கிறதா என்று பார்க்கலாம். புத்திரவாஞ்சையில்லாத தாய் தந்தையர்