பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பட்டிமண்டபம்

எவராவது உலகத்தில் உண்டா? அழகில்லாத பிள்ளை யானாலும், அறிவில் லாப் பிள்ளையானாலும் அதன் பெற்றோரும் அதனிடம் வாஞ்சை இல்லாமல் இருந்த தில்லையே. காக்கைக்கும்தன்குஞ்சுபொன்குஞ்சுதானே. பாரதத்தில் நற்குணம் நிரம்பிய பஞ்சபாண்டவரிடத்தில் புத்திரவாஞ்சை உடையவராய் குந்திதேவி இருந்தாள் என்பதில் வியப்பில்லை. சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமான துரியோதனாதி யரிடத்தும், அவரது தந்தை திருதராட்டிரனும் தாய் காந்தாரியும் புத்திர வாஞ்சை உடையவர்களாகத்தானே இருந்திருக்கின்றனர். அப்படி இருக்க சகல நற்குணசம்பன்னனான ராமனிடத்து தசரதன் வாஞ்சையுடன் இருந்தான் என்பதிலும் சிறந்த வீரனான இந்திர சித்தனிடம் இராவணன் வாஞ்சையுடன் இருந்தான் என்பதிலும் யாதொரு சிறப்பும் இல்லை. புத்திரவாஞ்சை என்பது பெற்றோரிடத்தில் ஊறி நிற்கும் ஒரு இயற்கை யான பண்பு. அந்தப் பண்பு கம்பன் காவியத்திலே மேலோங்கி நிற்கிறது என்று சொல்வதிலே அர்த்தமே இல்லை. இயல்பான ஒரு பண்பை, கம்பன், அருமையாகப் பாடியிருக்கிறான் என்ற அளவிலே தான் அதற்குச் சிறப்பு. காவியத்திலேயே அந்தப் பண்புதான் மேலோங்கியிருக்கிறது என்று சொல்ல முடியாது.

அடுத்த பதிபக்தி என்னும் பண்பு. பண்டைத் தமிழ் மக்களிடம் இப்பண்பு நிறைந்திருக்கிறது என்று விவாதித்தவர்கள் எடுத்துக்காட்டின்ார்கள். பதிபக்தியே மேலோங்கி நிற்கிறது என்று தீர்ப்புக் கூறாவிட்டால் தமிழ் மக்களது நாகரிகத்தையும் கலாச்சாரத்தையுமே பழிப்ப தாகும் என்று கூட மிரட்டிப் பார்த்தார் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர். ஆனால் இந்தப்பட்டிமன்றத் தலைவரோ இத்தகைய மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அஞ்சாதவர்