பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 85

என்பதை மறந்து விட்டார் அவர். நமது தமிழ் இலக்கியங்களில் கற்புடைய பெண்டிரது பெருமையும் சிறப்பும் பலபடப் பாராட்டப் பெற்றிருக்கிறது.

பெண்ணிற் பெருந்தக்க யாவுளகற்பெனும் திண்மை உண்டாகப் பெறின் -

என்றார் வள்ளுவப் பெருந்தகை. அவரது அடி யொற்றியே இளங்கோவும் கற்பொழுக்கத்தில் தலை நிற்கும் ஒரு கண்ணகியைச் சிருஷ்டித்து அவளைப் பத்தினித் தெய்வமாகவே வழிபட வகை செய்திருக்கிறார். நிதிவழி நேயம் நீட்டும் கணிகையர் குலத்திற் பிறந்த மாதவியைக்கூட கற்பொழுக்கத்தில் சிறந்தவளாக அமைத்து உருவாக்கியிருக்கிறார். இது எல்லாம் கூடப் பெரிதில்லை. தமிழர் கற்பு நிலைக்கு விளக்கம் சொன்ன் போது 'கற் பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை' என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள். மணிமேகலையில் வரும் ஆதி மந்தியார் - தன் கணவன் வெளியூர் சென்றி ருந்தபோது தன்னைக் கண்டு பிற ஆடவர் காமுறர் வண்ணம் தன் முகம் குரங்கு முகமாக மாற வேண்டும் என்று சதுக்க பூதத்தின் கோயிலில் வேண்டிக் கொண்டாள் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆகவே கற் பொழுக் கமோ, பதிபக்தியோ நமக்குப் புதிய விஷயமே அல்ல. நல்ல தமிழ் மகனான கம்பனும் சீதையின் கற்பொழுக் கத்தை, பதிபக்தியைக் கொண்டாடுகிறான் என்றால் அதில் வியப்பில்லை. சிறையிருந்த சீதையின் ஏற்றம் கூறவந்த கம்பன், அவளைக் கற்பின் கனலி என்றும் தவம் செய்த தவம் என்றும் போற்றிப் புகழ்வதோடு நில்லாமல், என் பெருந்தெய்வம் என்று வணங்கவுமே செய்கிறான். பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏத்துதல் தமிழ் மரபு. கம்பன் தன்காவியத்திலே சீதையின் பதிபக்தியைப் பற்றி