பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பட்டிமண்டபம்

மட்டும் பேசவில்லையே. ராமனைப் போன்று இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்விய வரம்பில் நிற்கும் ஆடவர் திலகமான ராமனது சதி-பக்தியையும் அல்லவா பாராட்டுகிறான்! இந்த நிலையில் காவியத்தில் பதிபக்தி மட்டுமே மேலோங்கி நிற்கிறது என்று சொல்வது எங்ங்ணம் ? வள்ளுவனும், இளங்கோவும் காட்டிய வழியிலேயே நின்று கம்பன் தன் காவிய நாயகியைப் படைத்திருக் கிறான் எனறு வேண்டுமானால் சொல்ல லாம். தமிழ் நாடும், தமிழ்ப்பெரும் புலவர்களும் காட்டிய மரபு அது. அந்த மரபு வழுவாமல் கம்பன் தன் காவியத்தை உருவாக்கியிருக்கிறான் என்றுதான் கொள்ள வேண்டும். அதைவிட்டு பதிபக்தி என்ற பண்புதான் காவியத்தில் மேலோங்கி நிற்கிறது என்று முடிவு செய்துவிட முடியாது. இனி எஞ்சியிருப்பது சகோதர பாசமே. இது உலக மக்களிடையே காணக்கிடைக்காத ஒரு அரிய, அபூர்வ மான பண்பு என்பதைக் கம்பன் கண்டு உணர்ந்திருக் கிறான். உள்ளங்கை அகலமே உடைய சின்னஞ் சிறு நாடுகளைப் படைத்திருந்த தமிழ் மன்னர் களான சேர, சோழ, பாண்டியர், பல்லவர் முதலியோர் தமக்குள் நிகழ்த்திய சண்டைகளை எல்லாம் கண்டும் கேட்டும் இருக்கிறான். அரைக்காணி நிலத்துக்கு அல்லும் பகலும் போரிட்டு மடியும் சகோதரர்களையும் பார்த்திருக்கிறான்பங்காளிக் காய்ச்சல் என்பது எந்தக் காலத்திலும் உள்ளதுதானே? லட்சிய காவியத்தைப் படைக்கத்துணிந்த கம்பன், சாதாரண மக்களிடையே காணப்படாத ஒரு பண்புக்கு ஏற்றம் கொடுக்க முனைகிறான். ஆகவேதான், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே துறந்து செல்லும் சக்கரவர்த்தித் திருமகனாம் ராமனையும், அவனுடன்