பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 87

இணைபிரியாது நாட்டிலும் காட்டிலும் உடன் திரிந்த தம்பியாம் இலக்குவனையும், தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்ததோடு மட்டுமல்லாமல், தமையன் பின்னாலேயே சென்று அவன் நாடு திரும்ப இண்ங்காத நிலையில், பாதுகையைப் பெற்றுத் திரும்பும் பரதனையும் உருவாக்கியிருக்கிறான். தமிழ் மக்கள் மட்டுமல்ல மக்கள் குலமே உணரவேண்டிய பண்பு இது என்றும் எண்ணியிருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட உயர்ந்த சகோதர பாசம், ஒரு தந்தையின் மக்களாய்ப் பிறந்த சகோதரர்களிடையே இருந்ததில் பெரிய அற்புதம் ஒன்றுமில்லை. வேடனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும் அரக்கர் கோமானான வீடணனையுமே, அந்தச் சகோதர பாசம் என்ற வட்டத்துள் ராமன் இழுத்து அணைத்துக் கொள் கிறானே, அதுதான் மிக மிக அற்புதம். அயோத்தியை. விட்டுக் கிளம்பி இலங்கை வந்து சேருவதற்குள், உடன் பிறந்தார் மூவரோடு, உடன்பிறவாத தம்பியர் மூவரையும் தேடிக் கொண்டு இந்த சகோதர் பாசத்தைக் காவியம் நெடுகிலும் நிலை நிறுத்தியிருக்கிறானே அந்த அருமையை என்ன என்று சொல்ல? 'ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்று இன்று சொல்லிக் கொண்டிருக் கிறோமே, அந்த ஒருமைப்பாட்டை, கம்பன் இந்தச் சகோதர பாசத்தின் மூலம் அன்றே விளக்கிக் காட்டி யிருக்கிறானே! இந்த அற்புதமான, அருமையான பண்பை விளக்கவே கம்பன் தன் காவியத்தை எழுதியிருக்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

ஆகவே கம்பன் காவியத்தில் மேலோங்கி நிற்கும் பண்பு சகோதர பாசமே! சகோதர பாசமே! சகோதர பாசமே என்று தீர்ப்புக் கூற நான் தயங்க வேண்டிய தில்லையே.