பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 7

அவர்கள் தங்கள் முடிவைத் தெரிவிப்பது மற்றொரு முறையாகும். இம்முறையில் நோக்கர்கள் தீர்ப்பறியக் கையைத் தூக்கச் சொல்லலாம்; அல்லது சீட்டெழுதிப் போடச் செய்யலாம். பெரும்பான்மையோர் கருத்தே முடிவாக, அதாவது தீர்ப்பாக அமையும். - -

முதல் முறையில், அதாவது தலைவர் தீர்ப்புக் கூறுவதிலும் இரு நெறிகள் கையாளப்படுகின்றன. பேசியவர்கள் எடுத்துக்காட்டிய சான்றுகளின் தன்மை, எண்ணிக்கையளவு ஆகியவற்றின் அடிப்படையில் கவனித்து வாதிட்டவர்களின் திறமைக்குப் பரிசு எனக் கருதும்படி தீர்ப்பளித்தல் ஒரு நெறி.

மற்றொரு நெறியோ, வாதித்தவர்கள் சொல்லவிட்ட வற்றையும், மறுக்காதனவற்றையும் தலைவரே எடுத்துக் காட்டி வாதிட்டவர்களின் திறமைக்குப் பரிசாக இல்லா மல், இயல்பாகவே கிடைக்கும் முடிவைத் தீர்ப்பாக வழங்குவதாகும். சகோதரர், அமரர், பாஸ்கரத் தொண்டைமான் இந்த நெறியைக் கடைப்பிடிப்ப வராவாா.

சகோதரர் தொண்டைமான் பட்டிமண்டபத்தில் எல்லையில்லாத ஈடுபாடுள்ளவர். கம்பன் விழாவுக்கு ஏற்பாடு செய்வதிலும் பட்டி மண்டபத்திற்கு ஏற்பாடு செய்வதில் அதிக அக்கறை காட்டினார் என்பதைப் பலரும் அறிவர். பல பட்டி மண்டபங்களில் பங்கு கொண்டு வாதிட்டுள்ளார். பல பட்டி மண்டபங்களில் தலைமை தாங்கியும் பொலிவூட்டியிருக்கிறார். அங்ஙனம் தாம் தலைமை தாங்கி வழங்கிய தீர்ப்புகளில் சிலவற்றை எழுதியும் வைத்துள்ளார். அவை தாம் இப்பொழுது நூல்வடிவெடுத்திருக்கின்றன. -