பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

7

இராமகதையின் திருப்பு முனைக்கு உதவும் கொடிய பாத்திரங்களில்

தலையானவர் யார்? -

கூனியா? கைகேயியா? சூர்ப்பனகையா?

இராமகதையின் பிரதான சம்பவம் இராவணவதம். அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்த ராமன் மகுடம் சூடி அயோத்தியை ஆண்டு தன் வாழ்வை நிறைவு செய்திருந்தால் இராமகதை. காவியமாக உருவாகியிருக்காது. இராவண வதம் நிகழ்வதற்கு ராமன் காடு செல்ல வேண்டும். அங்கு சீதையை இராவணன் அபகரித்துப் போய் சிறை வைக்க வேண்டும். 'சிறையிருந்த செல்வியை மீட்டு வரராமன் இலங்கை மீது போர்கொடு சென்று இராவணவதம் முடித்தல் வேண்டும். இப்படியெல்லாம் கதையைத் திருப்பி விட்டால் தானே கதை காவியமாகும். அப்படிக் கதையில் திருப்பு முனைகளாக அமைவதுதான் மந்தரையின் சூழ்ச்சி, கைகேயின் சூழ்வினை, சூர்ப்பனகையின் மானபங்கம் -