பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 89

எல்லாம். இதைத்தானே கவிச்சக்கரவர்த்தி கம்பன் அயோத்தியா காண்டம் கடவுள் வணக்கத்திலேயே குறிப்பிடுகிறான். -

வான் நின்று இழிந்து

வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப கோனும் சிறிய கோத்தாயும்

கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர்

இடுக்காண் காத்த கழல் வேந்தை என்பது தானே பாட்டு. அதிலேயே கம்பன் குறிப்பிடு கிறானே கூனியும் சிறிய தாயான கைகேயியும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினால்தான் ராமன் காடு செல்கிறான் என்று. அப்படி அவன் செல்வதானால்தான், இமையவர். இடுக்கண் தீர்கிறது. இராவணவதமும் முட்டின்றி முடிகிறது, என்பதை இந்தப் பாடலே விளக்குகின்றது. இன்னும் அரண்மனைத் தாதியான கூனிகாவிய அரங்கில் வந்ததும் அவளை அறிமுகப்படுத்தும் கவிஞன்,

இன்னல் செய் இராவணன்

இழைத்த தீமைபோல் துன்னரும் கொடு மனக் கூனி தோன்றினாள் என்று தானே கூறுகிறான். ஆதலால் காவியத்தின் திருப்பு முனை (fulcrum) மந்தரை சூழ்ச்சியாகவும் கைகேயி பெறும் வரங்களுமாகத்தான் முதலில் அமை கின்றன. -

காடு சென்ற ராமன் பதினான்கு வருஷம் பஞ்ச வடியிலே இருந்து அயோத்தி திரும்பினாலும் கதைப்