பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பட்டிமண்டபம்

போக்கு தடைப்பட்டுப் போகும். ஆரணிய காண்டத் தோடேயே காவியம் முற்றுப் பெற்றுவிடும். எந்தக் காரணத்திற்காக பரந்தாமன் அவதரித்தானோஅது முற்றுப் பெறாமலே போய் விடும். அதனால் சூர்ப்பனகை காமவல்லியாம் கன்னியாக அரங்கில் வரவேண்டியிருக் கின்றது. ர்ாமனிடத்து தன் காமம் கலந்த காதலைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அது நிறைவேற . ராமனுடன் இருக்கும் சீதையைத் தூக்கிச் செல்ல முயல வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியில், இலக்குவன் இடை புகுந்து அவள்தன் மூக்கு அறுக்க வேண்டியிருக் கிறது. இன்னும் இந்த மூக்கறுபட்ட மூளி சூர்ப்பனகை இராவண்ணிடத்து சீதையின் அழகை வர்ணிக்க வர்ணிக்க அவன் சீதையின்பேரில் தகாத காதல் கொண்டு வஞ்சனை யால் சீதையைக் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறைவைக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சிறையிருந்த செல்வியை மீட்கும் பொருட்டு ராமன் இலங்கை மீது வானரப்படை கொடு சென்று இராவண வதம் முடிக்க வேண்டியிருக்கிறது. இத்தனையும் தேவர்துயர்தீர்க்கவும், தேவர்கோனாகிய இந்திரன் பெற்ற வரபலத்தாலும் நிகழ வேண்டியிருக்கிறது. இப்படித் தானே கம்பன் சித்தாந்தப் படுத்துகிறான். பேசுகிறானே மண்டோதரி மூலம்

காந்தையருக் கணி அனைய

சானகியார் பேர் அழகும் அவர் தம் கற்பும் ஏந்து புயத்து இராவணனார்

காதலும் அச்சூர்ப்பனகை இழந்த மூக்கும் வேந்தர் பிரான் தயரதனார்

பணியினால் வெங்கானில் விரதம் பூண்டு