பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 91

போந்ததுவும் கடைமுறையே

புரந்தனார் பெருந்தவமாய்ப் போயிற்றம்மா!

என்றுதானே திருப்பு முனைகளை எல்லாம் முறைப் படுத்திக் கூறுகிறாள். ஆதலால் கூனி,கைகேயி, சூர்ப் பனகை மூவருமே காப்பியத்தின் திருப்பு முனைக்கு கைகொடுத்து உதவுகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. . .

ஆதலால் இப்பட்டிமன்றத்தின் அடுத்த பிரச்சனை இந்த மூன்று பாத்திரங்களில் கொடுமை செய்தவர்களில் தலையானவர் யார் என்பது தான். இந்தப் பிரச்சனை யையும் கம்பன் எவ்வாறு கூறுகிறான் என்பதை விவாதத் தில் கலந்து கொண்ட அன்பர்கள் சாங்கோ பாங்கமாக, தக்க தக்க சான்றுகள் காட்டி விளக்கினார்கள். அவர்கள் சொன்னதைக் கொஞ்சம் தொகுத்து முதலில் பார்த்து விடலாம் தானே. -

கூனி கைகேயியின்தாதி. கேகய நாட்டிலிருந்தே உடன் வந்தவள். கைகேயி ராமனிடம் காட்டும் அளப்பரிய அன்பை எல்லாம் அறிந்தவள். அந்த ராமனுக்கு மகுடாபிஷேகம் என்றதும் காரணம் இல்லாமலேயே கலகம் செய்ய நினைக்கிறாள். தேவர்கள் இயற்றிய தவமும், இராவணன் செய்த தீமையும்தான் அவளைச் சூழ்ச்சி செய்யத் தூண்டுகின்றன. ராமனுக்குத் தீங்கு இழைக்கப் போதிய காரணம் இல்லை என்றாலும் அவன் சிறு பிள்ளையாயிருந்தபோது அவள் தன் கூனிய முதுகில் மண்ணுருண்டைகளை வில்லில் வைத்து அடித்ததை யெல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டுவந்து கோபத்தை வருவித்துக் கொள்கிறாள்.

பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ்