பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பட்டிமண்டபம்

உண்டை உண்டதனை

உள்ளத்து உன்னுவாள் என்று கம்பன் பேசும் போது ஷேக்ஸ்பியரது 'ஒத்தெல்லோ நாடகத்தில் அயாகோஎன்ற கொடியவன் தனக்கு ஒத் தொல் லோ தம்பதிகள் பேரில் கோபம் உண்டாக எண்ணிய எண்ணங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. அதைத் தானே சிறந்த விமர்சகனான பிராட்லீ "the motive hunting of a motiveless malignity" sigăripi கூறுகிறான். இந்தக் கூனி, கைகேயியின் அந்தப்புரம் நுழைந்து தூங்கும் கைகேயியை எழுப்பி ராம பட்டா பிஷேகச் செய்தியைக் கூறுகிறாள். கைகேயியோ இந்த நல்ல செய்தி கொண்டு வந்ததற்காக அவளுக்கு ஒரு முத்து மாலையையே பரிசளிக்கிறாள். தன் எண்ணம் ஈடேறாதது கண்டு கொஞ்சம் கொஞ்சமாக புரை ஏற்றிக் கைகேயி யிடம், ராமன் பட்டத்திற்கு வந்த பின் கோசலைக்குத் தான் எல்லாச் சிறப்பும் இருக்கும், நீயும் உன் மகனும் அவர்களிடம் இரந்துதான் வாழ வேண்டியிருக்கும் என்று சக் களத்திப் பகையை ஊட்டிய பின் தான் கைகேயியின் மனம் திரிகிறது. எண்ணியதைப் பெற முன்னர் தசரதன் வாக்குக் கொடுத்திருந்த வரங்ளைக் கேட்கவும் மந்தரையே சொல்லிக் கொடுக்கிறாள். இதனாலேயே கம்பன் அவளைத் தீய மந்தரை என்றும், காலக்கோள் போன்றவள் என்றும் கூறுகிறான். உடலில் மட்டும் கூன் இல்லை உள்ளமும் கோடிய கொடியள் அவள் என்பது கவிச்சக்கரவர்த்தியின் முடிவு. அசோக வனத்திலிருக்கும் சீதைகூட, அங்கு காவல் காத்து நிற்கும் அரக்கியரைப் பற்றிப் பேசும் பொழுது அனுமனிடம் கூனியிற் கொடியார் அலர் இவர் என்று கூறுகின்றாள். இந்தச் சான்றுகளை எடுத்துக் காட்டியே கூனி கட்சியில் விவாதித்தனர். ‘. .