பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 93

கைகேயியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவள் செய்த வினை எல்லாம் நமக்குத் தெரியும். அதனால் தானே அவளைத் தீயவை யாவினும் சிறந்த தீயாள் என்றும், வசை வெள்ளம் நீந்துவாள் என்றும், முனியும் செய்கைக் கொடியாள் என்றும் கூறுகிறான் கம்பன். அழைத்த அழைப்பை ஏற்று அவள் முன்னே ராமன் வருவதை, "தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியன் வந்தாள்' - என்றே கூறுவான். கேகய நாட்டி லிருந்து திரும்பி வந்த பரதன் தன் தாய் செய்த காரியங் களை எல்லாம் தெரிந்த பின் அவளைத் தாய் என்றே கருதுகின்றிலன். அவளைக் கொன்று விடக் கூடத் துடிக்கிறான். அப்படி ஏதாவது செய்தால்தமையன் ராமன் கடிந்து கொள்வானே என்பதற்காகவே அஞ்சுகிறான்.

ஆயவன் முனியும் என்று

அஞ்சினேன் அலால் தாய் எனும் பெயர்

எனைத் தடுக்கற் பாலதோஎன்று தானே கூறுகிறான். இன்னும் கங்கைக் கரை யிலே குகனிடம் தன் தாயை அறிமுகப்படுத்தும் போதும் படரெலாம் படைத்தாளைப் பழிவளர்க்கும் செவிலி என்று பழித்தே உரைக்கிறான். அவளுடைய கொடுமை யின் எல்லை, காடு செல்ல இருக்கும் ராமனுக்கும் சீதைக்கும் தோழியர் மூலம் மரவுரியைக் கொடுத்து அனுப்பினாளே அதுதான் என்பது கைகேயி கட்சிக்காரரது வாதம்.

இனி சூர்ப்பனகை செய்த கொடுமையும் நமக்குத் தெரியும். மூக்கறுபட்ட இந்த மங்கை அரங்கில் வரும் போதே - " . . . . .

'நீலாமாமணி நிருதர் வேந்தனை

மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்