பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பட்டிமண்டபம்

என்று கவிச்சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தி விடுகிறான். ஆம், அவள்தான் தொடர்குலத்தையெல்லாம் தொலைக்கு மாறு நினைத்து தன் கிளைக்கு இறுதி காட்டுபவளாகவே அமைகிறாள். வஞ்சமகள், 'நிந்தனை அரக்கி, நீதி நிலையிலாள்" என்பது தானே கம்பனது வருணனை. அவளே ஒத்துக் கொள்கிறாளே

மற்று நின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் - - என்று பல பல சான்றுகள் காட்டி சூர்ப்பனகை மிகக் கொடியவள் என்று வாதித்தனர். -

மூன்று கட்சிக்காரர்கள் வாதங்களையும் கேட்டதில் நமக்கு எல்லாம் தெளிவாகத் தெரிவது மூவரும் கொடிய வர்கள் - என்பதுதான். சொல்லப்போனால் கொடுமை செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதாகவே இருக் கிறார்கள். என்றாலும் நம் பிரச்சனை இம்மூவரின் கொடிய பாத்திரங்களிலும் எவர் தலையானவர் என்பதல்லவா? சூர்ப்பனகை இராவணவதத்திற்கு நேரடியாக உதவுகிறாள் எனபது உண்மைதான.

கொலைதுமித்து உயர் கொடுங்கதிர்

வாளின் அக் கொடியாள் முலைதுமித்து உயர்மூக்கினை

நீக்கிய முறைமை மலைதுமித்தென இராவணன்

மணியுடை மகுடத் தலைதுமித்தற்கு நாள் கொண்டது

ஒத்தது ஓர் தன்மை - என்று கம்பன் கூறும் போது சூர்ப்பனகை எப்படி இராவணவதத்திற்கு உடனடியாக உதவுகிறாள் என்பது