பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 95

விளங்குகிறது. ஆனால் இராவணவதத்தை முடித்து வைத்தது ஒரு கொடுமையான செயலா? கெடுதலான

காரியங்களே செய்து வாழ்கின்றவன் நியாயமாக எய்த வேண்டிய முடிவுதானே அது. ஷேக்ஸ்பியரது துன்பியல் நாடகங்களை விமரிசனம் செய்த அறிஞன் பிராட்லி சொல்கிறான், "டிராஜடி என்னும் துன்பியல் முடிவு கெட்டவன் ஒருவன் அழிவதினாலே ஏற்படுவதில்லை; நல்லவன் ஒருவன் துயர் அடைவதினாலே தான் souGópg|<scrip. There is no tragedy in the expulsion of the evil, but the tragedy is that it involves the waste of priceless good, என்பதே அவனது விளக்கம். ஆதலால் இராவணவதத்தை முடித்துவைப்பது அப்படி ஒன்றும் கொடிய செயல் அல்ல. இதை உணர்ந்து தானோ என்னவோ கம்பனும் அவளைக் கொடியவள் என்று வலியுறுத்தவில்லை. ஒரே ஒரு இடத்தில், தான்'பொய் நின்ற நெஞ்சிற் கொடியாள் என்று கவிக் கூற்றாகக் கூறுகிறான். இதை மாத்திரம் வைத்துக்கொண்டு சூர்ப் பனகை மிகமிகக் கொடியவள் என்றோகொடிய பாத்திரங் களில் தலையானவள் என்றோ கூறுதல் இயலாது. ஆதலால் முதலில் அவளை விவாதத்திலிருந்து விலக்கி விடுகிறேன். இனி இருப்பவர் கூனியும், கைகேயியுமே, இருவரில் எவர் மிகமிகக் கொடியவர் என்று பார்ப்பது தான் இப்போது செய்ய வேண்டிய வேலை.ஆம் இராவண வதத்தைவிட, ராமனைக் காடு செலுத்தியது மிகமிகக் கொடுமையானதுதான். நல்லவன் ஒருவன் அல்லவா சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகிறான். ராமன் காடு செல்வதற்குத் துணை புரிகிறவர் கூனியும் கைகேயியும் என்றாலும், கூனியின் சேவை எல்லாம் கைகேயியைத் தூண்டுவதோடு நின்று விடுகிறது. அந்த எண்ணத்திற்கு வித்திட்டவள் என்ற அளவுக்கு மேலே