பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பட்டிமண்டபம்

அவள் கொடுமை செய்யவில்லை. மேலும் அவள் ஒரு தாதி. ராமனிடம் அன்புடையவள் அல்ல. சொல்லப் போனால் ராமனேதன் மகன் என்று சொல்லும் அளவிற்கு அன்பு காட்டியவள். அவள் கொடுமை செய்கிறாள். தன் கணவனிடம் வரம் வாங்குகிறாள். வரங்கொடுத்த தசரதன் இரங்கிக் கேட்டதை எல்லாம் மறுத்துத்தானே, ராமனைக் கூப்பிட்டனுப்பி அவனைக் காடு செல்லச் சொல்கிறாள். ஒருவரும் ஏவாமலேயே அவளே ராமனுக்கும் சீதைக்கும் மரவுரி கொடுத்தனுப்புகிறாள். இப்படி எல்லாம் கொடுமை இழைத்து தன் புருஷனான தசரதனது உயிருக்கே உலை வைக்கிற்ாள். இத்தனையும் செய்த பின்னும் இடரிலாமுகத்தாளாக வாழ்கிறாள். இப்படி ஒரு பாத்திரத்தைச் சிருஷ்டித்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன்னுடைய கவிக்கூற்றாகவே கைகேயியை,

சுடு மயானத்திடைதன் துணை ஏக தோன்றல் துயர்க் கடலின் ஏக கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்

கலி ஏக கழற்கால் மாயன் நெடுமையால் அன்று அளந்த

உலகு எல்லாம் தன் மனத்தே -நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாள்.

என்றே மிகவும் கடுமையாகவே கூறிவிடுகிறான். இதை விடக் கடுமையாக கூனியையோ சூர்ப்பனகை யையோ கம்பன் கூறியதாக இல்லை. ஆதலால் கம்பன் கருதியபடியே கைகேயிதான் இராம கதையின் திருப்பு முனைக்கு உதவும் கொடிய பாத்திரங்களில் தலையான வள் என்று தீர்ப்பு கூறுகிறேன்.