பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

8

கம்பன் கண்ட இராமனில்

சிறப்பாயிருப்பது

அவனது அழகா? அறிவா? ஆற்றலா?

இலக்கியத்தை வளப்படுத்துவது காப்பியங்கள். தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்திற்குப் பின்னால் எழுந்தவை. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி குண்டலகேசி. இவைகளையே ஐம்பெருங் காப்பியங்கள் என்று குறிப்பிடுகிறோம். இக்காப்பியங்களில் வளையா பதியும் குண்டலகேசியும் முழுவதாய் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த காப்பியங்களுக்கு எல்லாம் பின்னால் எழுந்த காப்பியமே கம்பனது இராமாவதாரம்.

காப்பியம் என்றால் அதில் நடுநாயகமாய் ஒரு காப்பியத் தலைவன் இருக்க வேண்டுமே. சிலப்பதி காரத்தில் காப்பியத் தலைவன் கோவலன். ஆனால் அவன் காப்பியத் தலைவனாகும் தகுதியைப் பெறவில்லை. அந்தக் காப்பியத்தில் காப்பியத் தலைவியாக நிற்பவள் கண்ணகியே. மணிமேகலையில் காப்பிய அமைதியையே