பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | | 81

67

வந்தமை போற்றுவனே” என்றெல்லாம் இவரது வாத வென்றி குறிக்கப்பட்டது.

“இராமானுசன் தந்தஞானத்திலே”

‘வாதியர்க்கு வாழ்வற்றது; கோட்பாட்டு நூல் கூழ் அற்றது, குற்றம் பதித்தவர்க்கு நாழ் (அகந்தை அற்றது'68 என்று இராமானுசர்வாத உலகில் நிமிர்ந்துநின்றார். .

திருமாலியச் சமய வாதப் பங்கு திறமாகவே இராமானுசரால் அமைந்தது எனலாம். (6) திருமாலிய சைவ இருவல்லியர் வாதப் பங்கு - மெல்லியராம் இரு வல்லியரை ஆரண (நான்மறை) வல்லி, ஆகம (சைவ வல்லி என்னும் பெயரில் வைத்து இருசமய (திருமாலியம், சைவம்) விளக்கம் என்றொரு நூல் எழுந்தது. பிற்காலத்தவரான அரிதாதர்’ என்பார் இதனை வடித்தார். இஃதொரு கற்பனை.

ஆற்றில் நீராடவந்த இரு சமய வல்லியரும் கரையேறி ஒப்பனைகள் முடித்து வாதம் செய்யத் துவங்கினர். நீராடிச் சோலையில் இருந்த பல சமயத் துறவியரையும் நடுவராக இருக்க வேண்டினர் . அவர்களும் இசையவே சமயச் சான் றோர் அவையே நடுவர் நிலைபெற்றது.

“அப்பெரு நூல்களில் அச்சமயங்களில்

ஆகிய தெய்வீகமும்