பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 T பட்டி மண்டப வரலாறு

!---

செப்பிட வேபெருமைச்சிறுமைச் செயல்

) “ “ : தெரிதரும்’ என்று பேசி

இருவரும் சைவப்பெருமை, திருமாலியப் பெருமை சொல்லி வாதிட்டனர். கடும் மோதல் இல்லை தாக்குதல் இடம்பெறவில்லை. மாற்றுக்கருத்தைத்தாழ்வாக்கிப்பேசும் போக்கும் இல்லை கேளடி சொல்லடி என்னும் அடி போடுதல் மட்டும் இருந்தது பெருமளவில் பாங்காகவே நிகழ்ந்தது. .

a திருமாவிய வல்லியின் கருத்தை ஏற்றாள். பல சமயத் துறவியராம் அவையோரும் கேட்டு வியந்து வாழ்த்தினர்.

(7) கடவுளர் வாதப் பங்கு ஆண் கடவுளர் பங்கு

கந்த புராணம் ஓர் உயர்ந்த பட்டி மண்டபக் காட்சியைத் தந்துள்ளது உலகில் உயர்ந்த இடமாகிய இமயமலையின் முகட்டில் உயர்ந்த கடவுளர் மூவர் பங்கு கொண்ட பட்டி மண்டபம் இது மன்றத்து அவையோர் மண்ணில் உயர்ந்த முனிவரும், விண்ணில் உயர்ந்த தேவருமாயினர். ஏறத்தாழ நடுவராகச் சிவபெருமான் ஆனார்.

அவையோரே தொடக்க உரையாற்றி வாதப் பொருளைப் பின்வருமாறு முன்வைத்தனர்