பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 83


‘மூவரில் முதலா னோரும் முதல்இடை முடிவும் இல்லாத் தேவரும், எவையும் நல்கும் செல்வரும் பரம்மேல் ஆகி ஒவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின்றோரும் ஏவர் () என்றெங்களுக்கு வல்லே இருவரும் (திருமால், பிரமன்) இசைத்திர்” என்றனர்.

முப்பெருங்கடவுளரில் எவர் முதல்வர் என்று கூறுமாறு இருபெருங்கடவுளரை மோதவிட்டனர் அக் காலத்தில் பிரமனுக்கு ஐந்து முகமாக ஐந்து தலைகள் இருந்தன . இந்த ஐந்தலைப் பிரமனார் அனைத்தையும் படைக்கும் யானே முதற் கடவுள்’ என்று அறைகூவலை முன் வைத்தார் . திருமால் அறைகூவலை ஏற்று, படைக்கும் உன்னை என் கொப்பூழ்த்தாமரையால் படைத்த யானே முதல்வன்’ என்றார். வாதம் வளர்ந்தது; நாளும் வளர்ந்தது; ஆண்டுக்கணக்கில் வளர்ந்தது . வாதத்தில் கடுமையும் வளர்ந்தது.

தூண்டிவிட்டோர் நாம் தூண்டியதால் நமக்குத் துன்பம்.நேருமோ என்றுஅஞ்சிநழுவிவிட்டனர். இருவரும் கொண்ட பகை (செற்றம்) மூழுகிறது . பொறுக்காத நான் மறையும், ‘ஓம்’ என்னும் மந்திரமும் வேறு வேறு உருவங் கொண்டு இடைக்கால நடுவர்களாகத் தோன்றின.

தோன்றி,

“வாதமது இயற்றல் (இயற்றவேண்டாம்)” என்றும்