பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 91

-

என்றபடி இதுவரை சொல்லால் போரிட்டு வென்ற பட்டி மண்டபங்கள் காட்டப்பட்டன.

பாட்டாலும் அஃதாவது இசையாலும், கூத்தாலும் வாதிட்டு வென்றமைக்கும் இலக்கியங்கள் உள்ளன.

இசைப்பட்டிப் பங்கு

பரஞ்சோதிமுனிவரின் திருவிளையாடற்புராணம் இசைப்பட்டிமண்டபக் காட்சியைத் தந்துள்ளது. அப்பகுதி “இசை வாது வென்ற படலம்” என்று வாது என்னும் சொல்லமைந்த பகுதியாகும். :

மதுரையில் வரகுணபாண்டியன் ஆட்சிக்காலம். தமிழிசைவாணன் பாணயத்திரனுக்கும் வடபுலத்து இசைவாணன் ஏமநாதனுக்கும் இசைப்போட்டி இசைப் பட்டி மண்டபம் நிகழ இருந்தது மதுரைச் சொக்கரின் இடைப்பாட்டால் நிகழாது போயிற்று இதனால் பாண பத்திரனுக்குத் தேட்டமும், ஏமநாதனுக்கு ஓட்டமும் கிடைத்தன.

ஆனால், இப்பாணபத்திரன் மனைவிக்கும், ஈழ நாட்டுப் பாடினி ஒருத்திக்கும் ஓர் இசைப்பட்டி மண்டபம் நிகழ்ந்தது.

வரகுண பாண்டியனுக்குப் பின்னர் ஆட்சியை ஏற்ற இராசராசபாண்டியன் ஈழநாட்டுப் பாடினி ஒருத்தியிடம் பெருவிருப்பம் கொண்டவன் அவள் தமிழ்நாட்டில்