பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 |T பட்டி மண்டப வரலாறு

பொதுநிலையில் நடுவனாக அமைந்து நோக்கினான். “பாணபத்திரன் மனைவியே வெல்கின்றாள் ,79

என்று தீர்ப்பளித்தான். அவையோரும் அதனை வழி மொழிந்தனர். அவையில் நாவலராக அமர்ந்திருந்த ‘சொக்கரும்,

இது அற்புதம்”,

என்றாராம். போட்டிக்கு விதித்த விதிப்படி தோற்ற இலங்கைப் பாடினி கழுத்தில் வென்ற தமிழ்ப் பாடினியை ஏற்றி அவளை அடிமையாக்கினான் வென்றவளுக்குச் சிறப்பு செய்தான் தோற்றவள் அமைதி பெற வரிசைகள் வழங்கினான்.

இவ்வாறு இசைப்பட்டி வாதப் பங்கு அமைந்தது.

கூத்துப் பங்கு

திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் சிவன்பால் சிவை சிறு பூசல் கொண்டாள் சிறுபூசல் சிவையின் கூத்தாக எழுந்தது. இது கூத்து அறைகூவலாயிற்று. சிவனும் அறை கூவலை ஏற்றார்.

கூத்துப்போட்டி துவங்கியது. கூத்திலக்கணம் தவறா மல் இரு கடவுள் மணமக்களும் ஆடினர் ஒரு நிலையில் சிவன் தன் ஒற்றைக் காலைத் தலையை ஒட்டி மேல் உயர்த்தி அடினார் பெண்பால் தன்மை நிறைந்த சிவை அவ்வாறு