பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 | பட்டி மண்டட வரலாறு

ஒரு வழக்கை ஏற்படுத்தினர் . உழவர் பெருமக்களைத் தொழில் செய்ய அழைப்பதற்கு

‘நாவலோ நாவல்” என்று கூவினர். “காவல் உழவர் களத்தகத்துப் போர் (வைக்கோல் போர்) ஏறி “நாவலோ நாவல் என்று உரைக்கும்

o , 85 நாள ஒதை ^*.

~...,

என்று முத்தொள்ளாயிரம் காட்டியுள்ளது. இதனை விளக்குவதுபோன்று ஒரு பாடல்.

‘நாவலோர்’ என விளிப்பத்

தொழுவர் (உழவர்) எலாம் நயந்தெய்தி

வினையின் மூள்வார்” என்று பாடிக் காட்டியது.

‘நாவல் என்னும் சொல்லில் வாதத்திற்குரிய நயமான

பொருத்தம் உள்ளது . நாவல் ஒரு சொல்லாய் மரத்தைக் குறிக்கும் நா வல்’ என்னும் இரு சொல்லாய் நாவன்மை என்றும் நா வலம் நாவால் பெறும் வெற்றியென்றும் குறிக்கும். இவ்வகையான பொருள்களால்,

‘நாவலோ நாவல் அழைப்பதாகி, அறைகூவல் அழைப்பிற்கு நாவல் மரக் கொம்பு அறிகுறியாய் நடப் பட்டது . இவ்வாறு நாவலத்தால் பேசுவதைத் தொண்ட ரடிப்பொடியாழ்வார் “நாவலிட்டு உழிதர்கின்றீர் (திரி கின்றீர்)” என்று நாவலிட்டு என்றார். இதில் திரிவதாகச் சொன்னமை சற்றுத் தாழ்வு காட்டும் குறிப்பாகும்.