பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 sl பட்டி மண்டப வரலாறு

எனவே, இடத்தால் ஒர் அமைப்பில்லாமல் மாறியது. அத்துடன் ஒரு வாதத்திற்கே இடமாற்றமும் நேர்ந்தது. வாதியின் இலக்கணம்

ஏதும், மேற்கோளும் எடுத்துக்காட்டித் தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்போன் மன்பதை அறிந்த வாதியாகும்”

என்று பிங்கல நிகண்டு வாதியின் வாத இலக்கணம் காட்டியது. இதனையே, சூடாமணி நிகண்டு, வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலியனவும், புராணங்களும் கூறின.

சமய வாதத்தின்போது எழுப்பும் வினாக்களாக நான்கு அமைந்தன.

சமயத்தலைவர் / கடவுள் யார்?

சமய நூல் யாது?

நூற்பொருள் யாது?

பொருளின் நடைமுறை என்ன? - எனும் இவை நான்கும் அனைத்துச் சமயத்தாராலும் வினவப்பட்டன. இவ்வாதமும் நால்வகைப் படையுடன் மோதும் களப்போர் போன்றது. கருத்துப்போர், சொற்போர் என்றும் போராகவே அமைந்தன. போருக்கேற்ப

தலைவன் - யானை நூல் - குதிரை