பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் I 101

நூற்பொருள் - தேர் பொருள் நடைமுறை - காலான் என உருவகம் செய்யப்பட்டன.

இருவர் இரு கருத்துக்களால் மோதிக்கொண்ட இருமுனைவாதமும், மூன்று கருத்துக்கள் மோதிய மும் முனை வாதமும் சமயப் பங்காயிற்று.

ஒரு கருத்து வாதமே மூன்று முறை நிகழ்ந்து மூன்றாம் முறை முடிவிற்கு வந்தது. வாதத்தில் பழிப்பு

சமய வாதத்தில் எதிர் வாதியைப் பழித்துப் பேசிக் கொண்டனர். சமயக் கடவுளரையும் பழித்தனர். புத்தனைச் சமணர் இழிவாகவே பழித்தனர் சமயச் சான்றோரைச் சாடினர். செற்றமும் சினமும் கொண்டனர்.

“பற்றா மாக்கள் தம்முடனாயினும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்” என்ற மணிமேகலை அடிகளில் கலாம் குறிக்கப்பட்டது. இதற்குக் கலகம செய்தல் - கலவரத்தை மூட்டுதல் என்று பொருள். இக்காலத்தில் கலாட்டா எனப்படுகிறது. வாதக் காட்சியைக் காணவும், வாதத்தைக் கேட்கவும் கூடியோர் இவ்வாறு நிகழ்த்தினர் போலும்.

இஃதும் வாதத்தில் பட்டி மண்டபத்தில் வேண் டாத ஒன்றே. இது சமயப் பங்கு,