பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 T பட்டி மண்டப வரலாறு

[]

“சாதி நோக்கியும் தன்மைநோக்கியும்

வாதம் அழித்துரை உரைப்போன் வாது

வென்ற நிலையிலும்

அரசின் சிறப்புச் சிதைவே” என்று செய்யுள் வகைமை என்னும் நூல் கூறியபடி வாதத்தை அழித்துப் பேசினர் . அவ்வழி கொண்டு வென்றிப் பொருட்டால் விலங்கை ஒத்தனர். இதனால் அரசின் பெருமையும் கெட்டது.

இஃதும் சமயப்பங்கு

தீர்ப்பு

பிற்கால வெற்றிவேற்கை என்னும் நூல்

“இருவர்தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையா ராயின் மறுமுறை நெறியின் வழக்கிறந்தவர்தாம் மனமுற மறுக்கின்றமுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வ தோர் வாள் ஆகும்மே” என்று கடிந்து கூறியது. இப்பாடலால், சமய வாதத்தில் பொருந்தாமல் உரைப்பர்; வழக்கிறந்து பேசுவர், எதிர்த் தவர் மனம் கலங்கிக் கண்ணிர் விடுவர். இவர்களையும் சிவன், திருமால், நான்முகன் எனும் முப்பெரும் கடவுளரும் அருள் செய்து காக்க முனைவர்.