பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 [...] பட்டி மண்டப வரலாறு

அது சிறப்பாக அரசவையிலோ பிற நூல்களிலோ பதிந்து நிலைக்கப்படவில்லை. வென்றார்க்குப் பரிசுகள், வெற்றிச் சின்னங்கள் வழங்கப்பட்டன. வெற்றிக் கொடி பிடித்தனர். “வாதி புகழ் பெறும்"என்றபடிபுகழ்பெற்றனர்.

தோற்றவர் வென்ற கருத்தை ஏற்றனர். ஏற்று வென்ற

சமயத்திலும் சேர்ந்தனர் ஏற்காமல் தற்கொலை செய்து கொண்டனர். அரசனால் கடுமையாக ஒறுக்கப்பட்டனர். வென்றவர் தோற்றவர் கழுத்தில் ஏற்றப்பட்டார்; பழிக்கப் பட்டனர்; ஊரை விட்டு விரட்டப்பட்டனர் . இவ்வாறு கொடுமைகளும் நேர்ந்தன.

இவற்றால் தருக்கம் என்பது பொருத்தமாயிற்று . தருக்கு என்பது செருக்கு தான் என்னும் மனத்திமிர்.

“தன்னை வியந்து தருக்கல்” என்றார்.

இதிலிருந்து ரகரம் றகரமாகும் இயல்பில் தறுகன், தறு கண்மை, தறுகண்ணாளர்’ என்னும் சொற்கள் அமைந்தன. தறுகண் என்றாலும் தன்னைத்தான் பெரியவனாக நினைத்தலே.

எனவே, தருக்கம்’ என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியத்திலும்சங்க இலக்கியங்களில் இச்சொல் மிக வந்துள்ளது . பாவாணரும் இது தமிழ்ச்சொல் என்றும் வடமொழியில் தர்க்க என்று இத்தமிழையே சொல்லினர். என்றும்