பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பட்டி - சொல், பெயர் ஆய்வு

அ) வாயும் சொல்லும்

நாநலம்

திருவள்ளுவர் “நாநலம்” என்றொரு சொல்லாக்கந் தந்தார் அதற்கொரு சிறப்பு விளக்கமாக “நலன்உடைமை” என்றார். அதற்குமேலும்,

“நாநலம் என்னும் நலனுடைமை, அந்நலம்

யாநலத் துள்ளது உம் அன்று’ என்று நாநலத்திற்கு ஒரு மணிமுடிச் சிறப்பு வைத்தார் . உலகச் சிறப்புக்கள் பலவற்றுள்ளும் ஆய்ந்து பார்த்தாலும் நாநலம் அவற்றிலெல்லாம் அடங்காத தனிச்சிறப்பு டையது. இவ்வாறு நாநலத்தைத் தனிநலம் ஆக்கினார்.

நாநலத்தின் வளர்ச்சிதான் நாவலம்'ஆகியது. வெற்றி

பெற்றதாக நிறைந்தது . நாநலத்திலிருந்து நாவலத்திற்கு வளர்ந்த வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு நாவை யுடைய வாய்தான் இழையோட்டமாகின்றது.

“வையம் ஈன்றதொன் மக்கள் உளத்தினைக் கையினால் உரை காலம் இரிந்திடப்

பைய நாவை அசைந்த பழந்தமிழ்"