பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 115


இதனைப் பிற உயிரினங்கள் செய்வதில்லை அஃ தாவது வாய் ஒலியை எழுத்தாகப் பலுக்குகின்ற (உச்சரிக்கின்ற செயலைச் செய்வதில்லை . சொல்லாக - மொழியாகப் பேசுவதில்லை . எனவே, அவை வாயில்லா உயிரினங்கள் எனப்படுகின்றன. கிளியும் மைனாவும் இவை போன்ற பிறவும் பேசும் என்பர் அவை சொன்னதைச் சொல்லும் . அது கேட்ட ஒலியைக் கேட்டபடி ஒலியாகத் தரும். அவை எழுத்துக்கூட்டல்கள் ஆகா. எனவே, அவையும் வாயில்லாதவைகளே.

வாயின் சிறப்பு :

வாயின் செயல்கள் இரண்டிலும் பேச்சே சிறந்தது . வாயின் உணவுச்சுவை மட்டும் பெற்றவன் நல்ல வாழ் வுடையவன் ஆகான் திருவள்ளுவப் பெருந்தகை வாய் உணர்வு மட்டும் பெற்றவரை மக்கள் இனத்தவராகவே கொள்ளவில்லை விலங்கு போன்றே கொண்டு மாக்கள் எனும் சொல்லால் குறித்தார் . சொற்கவையறியாது உணவுச்சுவையை மட்டும் உணர்ந்தவன் விலங்கு அவன் வாழ்ந்தால் என்ன அவிந்தால் என்ன என்று வெறுத்துப்

பேசினார்.

ஒருவனது குடியின் பெருமையையும், அவன் பண்பை யும் அவன் வாயிலிருந்து வரும் சொல்லே காட்டும் என்பதைத் திருவள்ளுவர்,