பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 T பட்டி மண்டப வரலாறு

-—

வழக்கில் வாய்

இவ்வாறெல்லாம் இலக்கியங்களில் காணப்படும் வாய்ச்சொற்களன்றி வாய்நீளம், வாய்த்துடுக்கு வாய்ச் சப்பை, வாய்த்திமிர், வாய்க்கொழுப்பு, வாய்மூப்பு, வாய்வாதம், வாய்க்கொத்து என்றெல்லாம் வழக்கில்

சொற்கள் அமைந்தன.

மேலே கண்டவற்றுள் வாய்ச்சொல், வாய்மொழி எனும் முதலிரண்டும் வாய்க்குப் பெருமை தருபவை முடிவான தரும்.

வாய்வலமும் பெருமையையும் சிறப்பையும்

பிறசொற்களில் வாய்வாளாமை சில இடங்களில் அமைதிக்கும், சில நேரங்களில் கலவரத்திற்கும் பயன் பட்டது.

மற்றைய,

‘வாய்காவாமை, வாய்ப்பகை, வாய்ப்பறை, வாய்த்தொட்டி,

வாய்மதம், வாய்ப்பந்தல்’

ஆகிய இலக்கியச் சொல்லாக்கங்களும் வழக்குச்சொற்களும் வாய்க்குச் சிறுமை தருபவை ஆயின.

இறுதியாக வாய்ப்பட்டி வெற்றி தோல்விகளால் முறையே பெருமையையும் சிறுமையையும் தருவதாயிற்று