பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 127

இலக்கிய வழக்கிற்குக் காட்டப்பட்ட இலக்கியங்களை ஒரு முறை நோட்டமிட்டால் காலவாரியாக அமைந்து காலப்போக்கில் இவ்வாறு தாழ்வுக்குச் சென்றதை உணரலாம்.

“தீயன பயிலா என்று அறிவித்தற்கு வாய் என வேண்டாது கூறினார்”

என்று பெருமை பெற்றுக் காலப்போக்கில் சிறுமை தருவதாய் ஆன வாய்பெரும் சறுக்கலில் வீழ்ந்தது.

வாய்ப்பட்டியும் பெண்டிரும்

இறுதியாக அமைந்த வாய்ப்பட்டி இக்காலத்தில் பெரும்பாலும் பெண்களையே அறிமுகப்படுத்துகின்றது . இது போன்று வாய்த்தொட்டி, வாயாடி வாய்நீளம் ஆகியவையும் பெண்களுக்கே பெரும்பாலும் வழங்கப் படுகின்றன.

இந்த நிலை எவ்வாறு வந்தது:

அக்காலப் பெண்கள் அடக்கத்தின் பிறப்பிடம் என்றாலும் அடக்கம் அளவுக்கு மீறி அடங்கிக் கிடப்ப தாகவும் பெண்கள் இயல்பில் இருந்தது.

தவறான வழியில் பிரிந்த கோவலனை நினைந்து வருந்தி அடங்கிக் கிடந்த பெண்ணாகவே கண்ணகியைக் காண்கின்றோம் கண்ணகியின் பெயர் வாய்ந்த வள்ளல்