பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 T பட்டி மண்டப வரலாறு

குமரி பின் என்ன? நாம் சிறுபிள்ளையில் விளையாடச் கட்டிய மணல் வீட்டைக்காலால்சிதைத்தவனை -Φ. பின்னலைப்பின்னின்று இழுத்தவனை - நாம் பாடி ஆடிய பந்தைப் பறித்துக்கொண்டு ஓடிய வனை இவ்வாறெல்லாம் நம்மைத் துன்புறுத்திக் குறும்புகள் செய்தவனைப் பட்டி என்று சொல்லாமல் வேறு எவன் என்று சொல்வதடி?

இக்காட்சியைக் கண்டவர்போல் புலன் அழுக்கற்ற அந்தணனாராகிய கபிலர் என்னும் பெரும் புலவர்,

“மணற்சிற்றிற்காலிற் சிதையா, கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி’ என்று பாடினார்.

கபிலர் சிறுபட்டி என்றதற்கு உரைவிரித்த நச்சினார்க்கினியர்

“சிறுபட்டி - சிறியனாகிய காவலில்லாதவன்” என்று எழுதினார்.

அந்தச் சிறுபட்டிக்குக் கபிலர் அக்குமரியில் வாயில் வைத்துக் “கள்வன் மகன்” என்று பகடிப்பட்டம் தந்தார். இக்காலத்தும் சிலர் பேச்சு வழக்கில் அட திருட்டுப்பய மகனே’ என்று ஏசுவதுண்டு அன்போடு கொஞ்சுவதும் உண்டு. தம்மை மறந்து'திருட்டுப்பய மகனே’ என்று தமக்கே

திருட்டுப் பயல் பட்டம் சூட்டிக் கொள்வதுண்டு ஒரு