பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T #35

வகையில் இது பொருந்தும் மேற்பாட்டில் இவ்வாறு அப்பனைத் திருட்டுப்பயல் - கள்வன்” என்றதும் வேண்டியதே தன் மகனை ஊர் சுற்றாமல் அடக்கி வைக்காமல் - காவல் இல்லாதுவிட்டதால் மகன் செயல்

அப்பனுக்கு ஏறலாம் அது தகும்.

ஒர் அழகுக் குழந்தை தெருவில் விளையாடியது. அவ்வழி வந்த ஒருத்தி மிக ஆர்வத்துடன் அக்குழந்தையைத் துக்கிக் கொஞ்சினாள் ஒரு சிறு பொன் கணையாழியை அக்குழந்தைக்கு அணிவித்து மகிழ்ந்து, போய்விட்டாள்.

அவள் இக்குழந்தையின் அப்பனுக்குக் காதல் பரத்தை தன் காமுகன் மகனைத் தன் மகன் போன்றே கருதிக் கொஞ்சிக் கணையாழி அணிவித்துப் போப் விட்டாள்.

குழந்தை வீட்டிற்குள் வந்தது தாய் அனைத்துக் கொஞ்சினாள் கையில் கணையாழி தெரிந்தது. அவனை அதட்ட இது ஏதடா என்றாள் அவன் மழலையைக் குழைத்து அந்த அம்மா என்றான் அவள் புரிந்து கொண் டாள் அவளிடம் கணையாழி பெற்றுவந்த வெறுப்பில் குழந்தையை முறைத்துப் பார்த்து,

‘நமக்கு ஒன்றும் உறவல்லாதவள் ஒருத்தி கையால் எம்மைப் பகடி செய்வது போல் அணிவித்துள்ளாள் என்று பதறிப் பேசினாள்

என்று கூறும் பெரும் புலவர்: