பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு i39

என்று பாடினார் . இப் பண்டிமன் என்றது முன் மூன்று அடிகளில் அமைந்த “எண்டிசை - அண்டனே - குண்டராம் எனும் சொற்களின் எதுகை கருதிய பண்டி இது பட்டி’ என்பதன் எதுகை கருதிய மெலித்தல் விகாரம் . அன்றிப் பண்டி என்று கொண்டு பொருள் கொள்தல் தாழ்வாகும். எனவே, பட்டிமன்’ என்பதே உரியசொல்.

நிகழ உள்ள வாதமாம் பட்டிமன்றத்துக்கு தலைமை யேற்கும் மன்னன் என்பதே குறிப்பு . இவ்வாறு பட்டிமன் என்றொரு சொல்லமைப்பு நேர்ந்தது.

பட்டி மாக்கள்

பெருங் கதையில்,

“பட்டி மாக்கள் கட்டுரை பகரும்’ என்று படடி மண்டபத்தில் வாதாடுவோர் பட்டி மாக்கள்” என்று குறிக்கப்பட்டனர். இது பட்டிமண்டபத்தில் வெட்டியும்

ஒட்டியும் வாதிட்டுப் பேசுவோரைக் குறித்தது ஆகும்.

பட்டி புத்திரர்

தொல்காப்பியத்தில் உயர்திணைப் பெயர்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று

“கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்’ இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,