பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு T 145

“அதற்குப் படு (உண்டாகும் பொருளின் அதுவாகு கிளவி (தொல் - பொருள் - 76) சோறுபடுக்கும் (ஆக்கும்) தியொடு (புறம் 20-7)

“படு (உண்டாகும்) பொருள் வெஃகிப் பழிப்படுவ (உண்டாவற்றை) செய்யார்”

(திருக்குறள் 172)

அழிக்கும் பொருளில் சில :

பட்ட (தோற்று அழிந்த வேந்தனை

அட்டவேந்தன்” (தொல் - பொருள் - 72)

களிறு களம் படுத்த (அழித்த) (புறம்-19 - 72)

“காதலன் தன் வீவும் காதலிநீ பட்டது உம் (இறந்ததும்) (சிலம்பு - 29 -7-2) திருக்குறளில் படு அழிக்கும் பொருளில் ஆளப்பட வில்லை. ஆனால் இதனடியாக அமைந்த படர் (கொடுக் கும் துன்பம்), படை’ (அழிக்கும் போர்க்கு உரியது) என்னும் சொற்கள் அழிவுப் பொருளில் உள்ளன.

அழிவாய் என்னும் பொருளைத் தருவது படுவாய் என்னும் சொல் இது வழக்கில் இறுதி கெட்டு படுவா என்று வழங்கப்படுகின்றது. இஃது இழிவழக்காயிற்று.

இது போன்றே படுவி என்பது கற்பு சிதைந்தவளைக் குறித்தது .