பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 | படட்டி மண்டப வரலாறு

இந்தப் படு அமைந்த ஒரே சொல் இருபொருளையும் தந்தமையும் இங்குக் காணத்தக்கது .

“எல்பட (ஞாயிறு தோன்றின காலத்தே மலர்ந்த காமரு சுளை f

என்று தோன்றும் பொருளிலும் அதேசொல்,

‘படுபுள் ஒப்பி எல்பட (ஞாயிறு மறைய) வருதியர்’

என்று மறைவுப் பொருளிலும் வந்தது.

இப்படு என்பதுபட்டி க்குமுதல்நிலையாக அமைந்து இரு பொருளையும் தருவதாயிற்று.

படு பெயர்ப்பொருள்

படு என்பது வினைப்பொருளைத் தருவது போன்று பெயர்ப் பொருளையும் தரும்.

“மரத்தின் குலையும் நீர்நிலையும் மதுவும் - முகரிமைப் பெயரும் படு என மொழிப” 38

என்று பிங்கல நிகண்டு படுவைப் பெயராகவைத்து நான்கு பொருள்களையும் பெயர்ப் பொருள்களாகக் காட்டியது. இந்நான்குபெயர்களில் முகரிமைப் பெயர் என் றால் என்ன?

இதற்குப் பேரறிவு என்று பொருள் காட்டினர். இப்பெயர்

நம் பட்டிமண்டபப் பாங்கிற்குத் துணை செய்வதால் இதன்

- f - பொருள் விரிவைக் காணவேண்டும்.