பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு [T 155

வினை சொற்போர்; இது நிற்க, இனிப் பட்டி என்றும் சொல்லால் நேர்ந்த பொருள் கொண்ட சொற்கள் விரிந்த தைக் காணவேண்டும்.

பட்டி - விரிவாக்கம்

பட்டி என்பது இடம் என்னும் பொருள் கொண்டதைக் கண்டோம். அதன்படி இடத்தைக் குறிக்க வும் நின்றது.

பட்டி தொட்டி

“ஊரெல்லாம் பட்டி தொட்டி” என்னும் கம்பர் தனிப்பாடலில் அதனைக் காண்கின்றோம் இன்றும் நேமத்தான்பட்டி, நற்சாந்துப்பட்டி, வேந்தன்பட்டி எனப் பல பட்டிப்பெயர் பெற்ற ஊர்கள் உள்ளன . இப்பட்டி ‘இடம்’ என்னும் பொருளில் அமைந்தது. எனினும் எவ்வகை இடம் என்று காண வேண்டும் கட்டுக்கடங்காது திரியும் மாடுகளை அடைக்கும் மாட்டுப்பட்டி இடம்பெற்ற ஊர் ஒன்றிரண்டு பெயர் பெற்றுப் பின்னர் பட்டி என்னும் பொதுப்பொருளில் பல ஊர்ப் பெயர்கள் அமைந்தன. மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் “கால்நடைத் தொழுவம் உள்ள சிற்றுர்” என்றார் . அதிகம் கால்நடை யாம் ஆக்கள், ஆடுகள், எருமைகள், எருதுகள் உள்ள ஊர்கள் பட்டி ஆயின. இவ்வாறு பல கால்நடைகள் குழுமி அமைவதை மாட்டுப் பண்ணை என்று சொல்வதும்

பட்டி - பண்ணைக்குப் பொருந்துவதாகும்.