பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 157

i

இதனை வாய்ச்சொல், வாய்மொழி என்று பெருமைக்குரியதாய் அடைந்து காலப்போக்கில் வாயாடி வாய்ப்பட்டி என்று சிறுமைக்குரியதாய் ஆனமை கொண்டும் உணரலாம்.

பட்டிமை

பட்டிமை என்னும் சொல் கிளைத்தது . இது பட்டித்தன்மை என்று பொருள் தரும் மிக அடக்கமாக வளர்ந்து வாழ்ந்தவள் கண்ணகி அவள் அடக்கத்தின் சின்னம், அருங்கற்பின் திருவுருவம், நாவடக்கமும், சொற்கட்டும் உடையவள். தற்புகழ்ச்சியில் ஊமை புகழ் வார் புகழ்ச்சிக்கும் நாணுபவள். தீயன பயிலாத நாவினள், உரக்கப் பேசியறியா வாயினள். இவ்வாறுதான் இளங்கோ வடிகள் கண்ணகியைக் காட்டியுள்ளார். அத்தகையவள் தன் கணவனுக்கு ஏற்பட்ட பழியால் குமுறிக் கொத்தளித்து எழுந்தாள் எழுந்து அரசவையில் வழக்காடினாள்: பெருமன்னன் முன் எதிர்த்துப் பேசி வழக்காடினாள். “தேராமன்னா, நற்றிறம் படராக் கொற்கை வேந்தே” என்றெல்லாம் குறைகூறும் சொற்றொடர்களையும் சொன் னாள் வழக்காடி வென்றாள் வெற்றியால் பாண்டியன் இறந்தான் கோப்பெருந்தேவியும் மயங்கி வீழ்ந்து கிடந் தாள் இருவர் அழிவிற்குப் பின்னும் அவள் சினக் கொப் பளிப்பு தீரவில்லை. இறந்துகிடக்கும் பாண்டிமாதேவியை விளித்து உணர்ச்சி வெள்ளத்தால் சூள் உரைத்தாள் சூள்