பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 | பட்டி மண்டப வரலாறு

உரைத்தது பட்டித்தன்மை கொண்டது . அது பட்டித் தன்மை என்பதை கண்ணகி வாயால் உரைக்க வைத்தார் இளங்கோவடிகள் . அவள் நான் உரைத்த சூள்கள் நடக்கக் காண்பாய்’ என்பவள்,

- - -, * - - ...;46 “என் பட்டிமையும் காண்குறுவாய்’

என்று தன் வாயாலேயே தன் பட்டித் தன்மையைக் குறித்தாள்.

சிலம்புக் காலத்திலேயே பட்டிமை என்னும் சொல் அமைந்தது. தொடர்ந்து “கழகம் பட்டிமம் கல்வி பயில் களம்” என்றது. பிங்கலம் (706).

‘ஏந்தல் தோழன் பட்டிமை உரைத்தது ஒரான்” என்று திருத்தக்கதேவர் பாடினார். ‘ஏந்தல் தோழன் பட்டிமைக்குப் பொருள் எழுதிய நச்சினார்க்கினியர்,

‘சீவகன் தோழன் புத்திசேனன் மறைந்திருந்து உரைத்தது” என்றார் “மறைந்திருந்து உரைத்தது” என்பது வஞ்சமாகப் பேசியதைக் குறித்ததாகும் பட்டிமை வஞ்சனைப் பொருளும் படும். பிங்கலர்,

“கூடம் புள்ளுவம் குத்திரம் கஞ்சம்

மாயை யொடு பட்டிமை வஞ்சனை யாகும்”

என்று பட்டிமையை வஞ்சனைச் சொற்களோடு பட்டிய

லிட்டார்.