பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு – 163

உரை

சொல்வதே பேசுதல் இப்பேச்சு உரைத்தல் ஆகும். நூல்களைப் படிக்கின்றோம்; செய்யுள்களைக் கற்கின் றோம். கற்ற செய்யுளின் நயப்பொருள் உள்ளத்தில் இனிப்பை ஏற்றுகின்றது. ஆழ்பொருள் அறிவைப் பட்டை தீட்டுகின்றது. அந்த இனிப்பை தீட்டிய வைரத்தை மற்றவரும் சுவைக்கவும் அணியவும் எடுத்து உரைத்தல் வேண்டும். -

கொத்தாகச் சிரித்த முல்லை மணம் விரிக்காது நின்றால் அது முல்லையாகாது; வெள்ளைமலர் தான். அது போன்றே செய்யுளைக் கற்றவன் தன் உள்ளத்தில் மலர்ந்த அதன் பொருளை மற்றவர்க்கு விளங்க விரித்து உரைத்தல் வேண்டும் . உரைக்க இயலாதவன் கற்றவன் ஆகான்; அற்றவனே ஆவான். இதனைத் திருவள்ளுவர்,

“இணர் ஊழ்த்தும் (மலர்ந்தும்) நாறா மலரனையர் கற்றது உணரவிரித்துஉரையாதார்” என்றார்.

இக்குறளில் “உரையாதார்” என்றதற்குச் சொல் லாதவர் என்பது பொருள் அன்று உரைத்தல் என்றால் செய்யுளுக்குப் பொருள் உரைத்தல் செய்யுளுக்குப் பொருளை விரித்தல் உரை எனப்படும். செய்யுள் நூல்களுக்குப் பொருள் உரைத்தோர் உரையாசிரியர் எனப்பெற்றதும் இதனால் தான். -