பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 T பட்டி மண்டப வரலாறு

என்று தண்டமிழாசான் சாத்தனாரும் நம்முடன் உரையாடு

கின்றார். -

எனவே, மக்கள் தம் எண்ணத்தை மற்றவருக்கு

வெளியிட்டுப் பேசிக்கொள்வதே உரையாடல் ஆயிற்று.

உரை வித்தகம்

இயல்பாகப் பேசப்படும் உரையாடலும் உரை யாட்டும் மாறுபட்டுப் பேசுவதாக, அஃதாவது வினா விடையாகவோ, தடை விடையாகவோ மறுப்பு நிறுப் பாகவோ நிகழின் அஃது உரை வித்தகம்” (நாலடி 3.15) எனப்பட்டது . இவ்வுரை வித்தகம் கருத்துப்போராம் பட்டிமண்டபத்தில் நிகழ்வதைக் குறிப்பதாகும். இவ்வாறு ‘உரை பட்டி மண்டபப் பாங்காயிற்று.

பட்டி உரை

இவ்வுரைவித்தகம் (திறமை) பட்டிமண்டப உரையாக “படிறும் u - உரையும்” என்று ஆசாரக் கோவை (52) பாடியது. சொல்லாடல்

உரையாடல் ஒருவருக்கொருவர் 3.Tirg

பேச்சு இஃது ஒரு முனை அப்பேச்சு சொற்சோர்வு இன்றித்துணிவாகவும், சோடையின்றி முறையாகவும் பேசப்