பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 167

படுதல் அடுத்த முனை. இதற்கு அறிவுத் தெளிவு வேண்டும். இடம், காலமறிந்து உரிய சொற்களைத் தேர்ந்து பெய்து சொல்ல வேண்டும் . இது சொல்வன்மை எனப்பட்டது . அதனையே மேலும் உறுதியுடனும், திறமையுடனும் சொல்லுதல் சொற்றிறன் எனப்பட்டது. இவ்வாறெல்லாம் சொல்லை ஆளுதல் சொல்லாடல்’ எனப்பட்டது. .

சொல் வன்மையுடன் திறமையாக உரையாடிப்

பேசுபவன் “சொலல் வல்லன்” எனப்பட்டான் . அவ்வாறு பேசும் பெண் ‘சொல்லாட்டி” எனப்பட்டாள் சொல் லாடுதலில் வல்லவளான ஒரு காதல் தலைவியோடு உரையாடிய ஒரு காதல் தலைவன், அவளோடு சொல்லாட

முடியாமையை,

“சொல்லாட்டி நின்னொடு

சொல்லாற்ற கிற்பார் uuri?”

என்றான். அவளைச் சொல்லாட்டி என்றான். அவளுடன் சொல்லாடி நிற்க எவரும் இல்லை என்றும் அவன் “சொல்லாற்றகிற்பார்” என்று சொல்லாற்றுதல் என்றொரு சொல்லாக்கமும் தந்தான். இஃது ஒரு சொல்லாடுதலுக்குச் சொல்லாற்றுதல் வேண்டும் என்பதைக் குறித்தாயிற்று.

மற்றொரு கலித்தொகைத் தலைவன் தன் காதல்

தலைவியின் இசைவுக் கருத்தைப் பெறத் தன் சொல்லாற்று தலைப் பயன்படுத்த எண்ணி,