பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 173

“நாம் சொற்களால் மக்களை ஆள்கின்றோம்”

- இஃதும் மேலைப் பொன்மொழி.

மேலேகாட்டப்பட்டமூன்றும்முறையே இங்கிலாந்து நாட்டுச் சொற்பொழிவுத் துறையின் பொற்காலமாம் பிற்காலத்தில் வாழ்ந்த விளாப்ஃச்சன், சிபார்சு, டிசரலி ஆகிய மூவர் உதிர்த்த பொன்மொழிகள்.

இம்மூன்றையும் படித்து ஒன்று கூட்டிநோக்கினால்

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்பெறின்”

ான்னும் குறள் விரைந்து நினைவிற்கு வருகின்றது . எங் கெங்கோ எவ்வெப்பொழுதோ கூறப்பட்ட பல கருத்துக் களின் மாணிக்கச் சுருக்கம் அன்றோ இக்குறளாக உள்ளது. இக்குறள் சொற்பொழிவுத் துறைக்குவழங்கிய ஒளிக்கதிர்.

சொற்பொழிவிற்கு எவ்வெவ்வகைச் சொற்களைக் கொள்வது திருக்குறள் பட்டியலிட்டுள்ளது.

“சொல்லின் தொகை, சொல்லின் வகை, சொல்லின் நடை சொல்லின் திறன், சொல்லின் நுணுக்கம், இன்சொல், பயனுடைய சொல், செல்லுஞ்சொல், வெல்லுஞ் சொல்” எனக் கூறப்பட்டவை கொள்ள வேண்டியவை.

பயனில் சொல், பண்பில் சொல், பின்னோக்காச் சொல், சோர்வுச் சொல், புன்சொல், இன்னாச்சொல்,