பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு H 183


இங்கு, பட்டி என்னும் சொல்லாய்வின்படி பட்டி நிகழ் விடம் பட்டிமண்டபம் என்னும் பெயர் பெற்றது.

இடையில் பட்டி மண்டபம் பற்றி ஒரு சிலரால் இப்பெயர் வடபுலத்துப் பெயராகிப் பட்டிபுத்திரர் என் பதிலுள்ள பட்டியின் பெயரால் அமைந்தது என்றனர் . எவர், இவ்வாறு தொடங்கினாரோ அறிய இயலவில்லை . சில உரைநடை நூல்களில் இக்கருத்து எழுதப்பட்டது.

இஃது ஒரு தவறான நோக்கில் எழுந்தது.

பட்டிபுத்திரர்’பற்றி முன்னர் காணப்பட்டது. பட்டி என்பவன் ஒரு மிகத்திறமையான அமைச்சன் புகழ்பெற்ற விக்கிரமாதித்த மன்னனின் அமைச்சன் அவன் திறமை கொண்டு தமிழ்நாட்டார் பட்டி என்று கொண்டனர் என்பதே புதுக்கரடி.

இப்புதுக்கரடி உலவியதைக் கருதிய மொழிஞாயிறு பாவாணர், -

பட்டி மண்டபம் சமயக் கணக்கர் எதிரிகள் கூற்றையடித்துத் தம் கருத்தை நிறுவும் மண்டபம், விக்கிரமாதித்தனின் மந்திரியாகிய பட்டி'யின் பெயரால் ஏற்பட்ட மண்டபம் என்பது எள்ளி நகையாடத்தக்கது” என்று எழுதினார்.

விக்கிரமாதித்தன் அமைச்சன் பட்டி பற்றி அறிந்தால் இது எள்ளிநகையாடத்தக்கது என்பது உறுதியாகும்.